ஹவுராவில் இருந்து டாடாநகர் நோக்கிச் சென்ற ஸ்டீல் எக்ஸ்பிரஸ் ரயிலில், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும் இருக்கை ஒதுக்கப்படாததால் ஒரு பயணி கழிவறை அருகே நின்று கொண்டு தனது முழுப் பயணத்தையும் கழித்த அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்தப் பயணியின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பயணச்சீட்டு பரிசோதகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வைரல் காணொளியில், பாதிக்கப்பட்ட பயணி பாதுகாப்புப் படையினரை வரவழைக்குமாறு கோருவது தெளிவாகக் காட்சியளிக்கிறது.
https://twitter.com/MandeepRajBhar9/status/2081687294470390031/photo/1
இந்தச் சம்பவம் குறித்துப் பயணி தரப்பில் எழுப்பப்பட்டுள்ள புகாரில், டி.டி.இ. பிரச்சனையைச் சமாளிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும், பணம் பெற்றுக்கொண்டு தனது இருக்கை வேறு யாருக்கோ விற்கப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் முன்பதிவு செய்த பயணிகளுக்கே இதுபோன்ற ஏமாற்றமும் அவதியும் ஏற்படுவது பயணிகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…