பெங்களூரு கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபல ‘ஸ்டார்பக்ஸ்’ உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாகப் பர்ஸைத் திருடிச் சென்ற பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திஷா பாட்டியா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்தச் சிசிடிவி காட்சியில், மேஜையில் வைக்கப்பட்டுள்ள பைக்குள் நைஸாகக் கையை விட்டுப் பர்ஸை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் நழுவிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. பொது இடங்கள் மற்றும் உணவகங்களில் பொருட்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பெங்களூரு கமர்ஷியல் ஸ்ட்ரீட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
