திடீரென வெடித்த டயர்..! நொடியில் மாறிய கோலம்.. திருச்சியில் நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு…!!

By Soundarya on தை 19, 2026

Spread the love

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை வழியாகச் சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 48 வயதான வீரலட்சுமி என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த மற்ற 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.