5000 வெரைட்டி சாப்பாடு…! “கேஸ் சிலிண்டர் வேணாம்.. விறகு அடுப்பும் வேணாம்…” கொடைக்கானல் பெண்ணின் மேஜிக் சமையல்…!!

By Devi Ramu on பங்குனி 26, 2026

Spread the love

நாடு முழுவதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானலைச் சேர்ந்த கிரிஜா என்பவர் எரிபொருள் தேவையே இல்லாத ‘அடுப்பில்லாச் சமையல்’ முறையை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார். பிரபல சமையல் கலைஞர் தாமுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், காய்கறிகள் மற்றும் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு பிரியாணி, இட்லி, பொங்கல் உள்ளிட்ட 5000 வகையான உணவுகளை அடுப்பின் உதவியின்றித் தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் 1500 பேருக்குச் சமைக்கும் திறன் கொண்ட இவர், 24 மணி நேரம் தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை படைத்ததுடன், 87 நிமிடங்களில் 150 வகை உணவுகளைச் செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

குடும்பத் தலைவிகள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களுக்கு இந்த ஆரோக்கியமான சமையல் முறையைச் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வீட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு இயற்கை சத்துக்கள் குறையாமல் சமைக்கும் இந்த முறை, வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என அவர் வலியுறுத்துகிறார். எரிபொருள் தட்டுப்பாட்டை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, தமிழர்களின் பாரம்பரிய இயற்கை உணவு முறையை மீட்டெடுக்கும் இவரது முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.