கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் கல்பருத்திவிலை பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிந்து (25). இருவருக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டிலிருந்து சிந்து விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த சிந்துவின் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைதொடர்நது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைக் குறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் புதுக்கடை காவல்துறையினரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த புகாரில் என் மகள் சிந்துவுக்கும் அனிலுக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்தக் கொடுமையை தாங்க முடியாமல் என் மகள் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் போலீசார் அந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…