நிஜ வாழ்க்கை ‘த்ரில்லர்’: “நீ கருப்பா இருக்க… எனக்கு தகுதி இல்ல!” – கணவரை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய ‘பியூட்டி பார்லர்’ மனைவி…!

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் மசாலா வியாபாரியான தேவ்கிருஷ்ணா புரோஹித் (28) என்பவர், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரவு தனது வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில், கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்திற்காகத் தனது கணவரைக் கொன்றுவிட்டதாக அவரது மனைவி பிரியங்கா புரோஹித் நாடகமாடினார். சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாகவும், தன்னை அவர்கள் கட்டிப்போட்டு சித்திரவதை செய்ததாகவும் கூறி காவல்துறையினரை திசைதிருப்ப முயன்றார்.

இருப்பினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பிரியங்காவின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, கொள்ளை போனதாகச் சொல்லப்பட்ட நகைகள் வீட்டிற்குள்ளேயே மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரியங்காவின் கைபேசித் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவர் கம்லேஷ் புரோஹித் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், இருவரும் இணைந்து தேவ்கிருஷ்ணாவைக் கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது. கணவர் “கருப்பாக” இருப்பதாகவும், தனக்குத் தகுதியற்றவர் என்றும் கூறி பிரியங்கா அவரை அடிக்கடி அவமானப்படுத்தி வந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் கொலையை அரங்கேற்ற கம்லேஷ் மூலமாக ஒரு லட்சம் ரூபாய்க்குச் சுரேந்திர பாட்டி என்ற கூலிப்படை கொலையாளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த அன்று இரவு, பிரியங்கா திட்டமிட்டே வீட்டின் கதவைத் திறந்து வைத்துள்ளார். உள்ளே புகுந்த சுரேந்திரா, உறங்கிக் கொண்டிருந்த தேவ்கிருஷ்ணாவை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இது ஒரு கொள்ளைச் சம்பவம் போலத் தெரிவதற்காக அறையிலிருந்த பொருட்களைச் சூறையாடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது பிரியங்கா மற்றும் அவரது காதலன் கம்லேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கூலிப்படை கொலையாளி சுரேந்திராவைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. “என் மகனைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், நீதி மட்டுமே எனக்குத் தேவை” எனப் பாதிக்கப்பட்டவரின் தாயார் கதறி அழுது நீதி கோருகிறார். குடும்ப அமைதிக்காக மனைவியின் அனைத்து கொடுமைகளையும் பொறுத்துக் கொண்ட ஒரு மனிதனின் வாழ்க்கை, துரோகத்தால் இவ்வாறாக முடிவுக்கு வந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

4 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

16 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

17 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

22 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

29 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

35 minutes ago