உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வேத் பிரகாஷ் சிங் என்பவரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். முதுகுத்தண்டில் குண்டு பாய்ந்ததால் அவர் எழுந்து உட்காரவோ அல்லது மருத்துவம் பார்த்து வருமானம் ஈட்டவோ முடியாத மாற்றுத்திறனாளி நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தச் சூழலில், கணவரின் வாழ்வாதாரத்தை அழித்த அதே மனைவி வினீதா, அவரிடமிருந்து மாதந்தோறும் பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இக்கோரிக்கையை ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வினீதா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரின் வருமானம் ஈட்டும் திறனை மனைவியின் குடும்பத்தினரே திட்டமிட்டுச் சிதைத்துவிட்டு, இப்போது அவரிடமே பணம் கேட்பது அநீதியானது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கணவர் தனது மனைவியைப் பராமரிக்க வேண்டியது கடமை என்றாலும், அது அவரது உடல் நலம் மற்றும் வருமானத்தைப் பொறுத்தது என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். ஒருவரது தவறான செயலால் உருவான பாதிப்பைப் பயன்படுத்தி, சட்டத்தின் மூலம் ஆதாயம் அடைய முடியாது என்ற இந்த அதிரடித் தீர்ப்பு, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…