தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அல்வால் கோபால்நகர் பகுதியில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பெற்ற தந்தையைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோபால்நகரில் வசித்து வரும் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அந்த நபர், தனக்கு பிறந்த சொந்த மகளையே பாலியல் ரீதியாக அத்துமீறிச் சீண்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டு அலறியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், கணவனின் கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பெற்ற மகள் என்றும் பாராமல் காமகொடூரனாக மாறிய கணவனின் செயலைத் தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த மனைவி, தனது இரண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து சேலையால் கணவனின் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…