பிரபல ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ, தொழில் அதிபர் ஆனந்த் அம்பானிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வந்தாரா’ கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 13.7 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கடிகாரம், அம்பானி குடும்பத்தின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான ‘வந்தாரா’-வை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் 397 விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன், கடிகாரத்தின் உட்புறத்தில் ஆனந்த் அம்பானியின் சிறிய உருவச் சிலையும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கடிகாரம், கலைநயம் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஆடம்பர கடிகாரம், ஒரு தனித்துவமான கலைப்படைப்பாக அமைந்துள்ளது.
— Nabila Jamal (@nabilajamal_) January 22, 2026
