தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு… “அறிவு இருக்கா இல்லையா..?” அமைச்சர் மா.சு VS ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்த வார்த்தைப் போர்..!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தவெக (TVK) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டங்களைக் குறிப்பிட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர், “மா. சுப்பிரமணியனுக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்ற தொனியில் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, இதேபோன்ற அரசியல் மோதல்களின் போது, மக்கள் நலன் சார்ந்த இந்த ஆட்சி குறித்துப் புரிந்துகொள்ளாமல் பேசுபவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கடந்த கால ஆட்சியில் நடந்த அசம்பாவிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.