சீனாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவதை போல தானே உருவாக்கிய பறக்கும் ஹோவர்போர்டு மூலம் மலைகள் மற்றும் யாங்சே நதியைப் பறந்து கடந்து படைத்துள்ள சாதனை உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தைச் சேர்ந்த சங் ஷிங்யூ என்ற இளைஞர், 14 வயதிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தந்தையின் மர ஆலைக்கு வேலைக்குச் சென்றவர். விமான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், சமூக வலைதளங்களில் என்ற பெயரில் அறியப்படுகிறார். ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வரும் ‘கிரீன் காப்ளின்’ கதாபாத்திரத்தின் பறக்கும் சாதனத்தால் ஈர்க்கப்பட்ட இவர், கடந்த 2 மாத தீவிர உழைப்பில் மனிதனை சுமந்து செல்லும் மின்சார ஹோவர்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
