தென் தமிழகத்தில் விமர்சையாக நடைபெறும் தசரா திருவிழா… ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா சிறப்புகள் ஒரு பார்வை…

Spread the love

இந்து மத வழிபாடுகள் கொண்டாட்டங்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழா. இந்த நவராத்திரியில் பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி கொலுவில் அமர்த்தி பத்தாவது நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தசரா திருவிழா தென்தமிழகமான திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

திருச்செந்தூருக்கு அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இது மட்டுமல்லாமல் திருநெல்வேலி தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடவுள்களின் வேஷம் அணிந்து கோவிலுக்கு செல்வர். திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் 9 நாட்கள் 9 வித அலங்காரங்களை அம்பாளுக்கு செய்து விசேஷ பூஜைகளில் நடத்துவர்.

எந்தெந்த பகுதியில் அம்பாள் திருக்கோவில்கள் இருக்கிறதோ அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு விசேஷ பூஜைகளை கொடுத்து தங்களது குடும்பம் சார்பாக குடும்ப நலனுக்காக நடத்துவர். பத்தாவது நாள் தசரா அன்று மகா பூஜை நடைபெற்று அன்றைய தினம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி சப்பர வீதி உலா நடைபெறுவது விசேஷமான நிகழ்வாகும்.

இது மட்டுமல்லாமல் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ஆண்களும் பெண்களும் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வர். திரிசூலம் கு குத்துவது தீச்சட்டி ஏந்துவது போன்ற வேண்டுதல்களை குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நிறைவேற்றுவர். காளி போன்ற வேடம் அணிந்து ஆண்கள் காணிக்கை பெற்று கோவிலுக்கு செல்வர். காளி வேடம் மட்டுமல்லாது முருகன், குறவன் குறத்தி அரக்கன் போன்ற பல வேடங்கள் தரித்து கோவிலுக்கு செல்லும்போது திருநெல்வேலி முழுவதுமே விழாக்கோலம் பூண்டு கடவுள்கள் எல்லாம் வீதியில் நடமாடுவது போல இருக்கும். அவ்வளவு பிரசித்தி பெற்ற ஆண்டுதோறும் நடைபெறும் விசேஷமான திருவிழா தான் இந்த தசரா திருவிழா.

admin

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

4 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

4 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

5 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

5 மணத்தியாலங்கள் ago