“யாரையும் சும்மா விடமாட்டோம்!”… AI-யின் மிகக் கொடூரமான முகம்… ஜான்வி கபூருக்கு ஆதரவாக சீறிய ஜூனியர் என்.டி.ஆர்… அலறும் சைபர் குற்றவாளிகள்…!!

By Gayathri on ஐப்பசி 6, 2026

Spread the love

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தேவரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுட்டமல்லே’ பாடலின் காட்சிகள் AI தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பாடலில் நடித்த நடிகை ஜான்வி கபூரின் முகத்தை வைத்து, ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த மோசமான அத்துமீறல், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள நடிகை ஜான்வி கபூர், இது மிகவும் வேதனையளிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரது உருவத்தை இப்படி அருவருப்பாக மாற்றுவது, பாலியல் வன்கொடுமைக்கு இணையான டிஜிட்டல் தாக்குதல் என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ஒரு பெண்ணின் உடல் மீதான மரியாதையும், அவரது சம்மதமும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை வலியுறுத்திய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய ஆபத்துகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

   

ஜான்வி கபூருக்கு ஆதரவாக ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த கீழ்த்தரமான வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் அதனைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜூனியர் என்.டி.ஆர் எச்சரித்துள்ளார். மேலும், AI தொழில்நுட்பத்தை இப்படித் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாகக் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.