“நீ ஒரு ஆர்டிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்ட…” இந்த பைக்கை கொஞ்சம் உற்று பாருங்க…! அப்புறம் அசந்து போயிருவீங்க…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on தை 6, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் ஒரு பைக் மாடிபிகேஷன் வீடியோ தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது சாதாரணமாகத் தெரியும் அந்த பைக்கின் முன்பக்கத்தைப் பார்த்தால், எஞ்சின் மற்றும் டேங்க் பகுதியில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளனர். ஒரு அகலமான இரும்பு அமைப்பை இணைத்து, இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய பைக்கை, நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் ஒரு மினி கார் போல அந்த நபர் மாற்றியுள்ளார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Prashant Dubey (@iprashant._)

வண்டியின் சமநிலையைப் பேணுவதற்காகப் பின்புறம் ஒரு கூடுதல் சக்கரத்தையும் பொருத்தி, ஒரு வினோதமான தோற்றத்தை அந்த பைக்கிற்கு அவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது மாடிபிகேஷன் இல்ல, அதுக்கும் மேல” என்றும், “கண்களை நம்பவே முடியல” என்றும் நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.