அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்து மும்பையைப் பார்வையிட்ட பிறகு, “இந்தியாவில் மெஸ்ஸியை விட கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ‘கிளெரோஸ்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஃபெடரிகோ அஸ்ட், முதன்முறையாக இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். மும்பை நகரைச் சுற்றிப் பார்த்த பிறகு தனது முதல் அனுபவங்களை எக்ஸ் தளத்தில் பட்டியலிட்டுப் பதிவிட்டார். அதில், “இந்தியாவில் இடதுபுறம் வாகனம் ஓட்டுகிறார்கள், போக்குவரத்து நெரிசலும் ஹாரன் சத்தமும் அதிகமாக உள்ளது. தெருக்களில் குப்பைகள் இருந்தாலும், மும்பை மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. மக்கள் மிகவும் அன்பானவர்கள்” எனப் பல விஷயங்களைப் பாராட்டி எழுதியிருந்தார்.
ஆனால், அவரது பதிவில் இருந்த ஒரு குறிப்பிட்ட செய்தி விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. “அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை விடக் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத்தான் இந்தியாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியப்படைந்தேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பதிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய நெட்டிசன்களும் மெஸ்ஸி ரசிகர்களும், “நீங்கள் இன்னும் முழு இந்தியாவையும் பார்க்கவில்லை; கேரளாவிற்கும் கொல்கத்தாவிற்கும் சென்று பாருங்கள், மெஸ்ஸியின் வெறித்தனமான ரசிகர்கள் யார் என்று தெரியும்” என அவருக்குப் பதிலடி கொடுத்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…