rhumi

Hybrid Reusable Rocket ஐ கண்டுபிடித்த டிரக் ட்ரைவரின் மகன்… ISRO உடன் இணைந்து ரூ. 800 கோடி நிறுவனமாக வளர்ந்து சாதனை…

By admin on ஐப்பசி 23, 2024

Spread the love

வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த ஒரு தகுதியோ பணமோ தேவையில்லை. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே இருந்தால் ஏதாவது ஒரு வழியில் ஜெயிக்க முடியும். படித்த படிப்பில் பரீட்சையில் தோல்வியுற்ற ஒரு மாணவன் இன்று 800 கோடி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அவரைப் பற்றி இனி காண்போம்.

   

ஆனந்த் மேகலிங்கம் தனது எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பின் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவர் தான் ஆனந்த். இவரது தந்தை ஒரு டிரக் டிரைவர் மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. முதன்முறையாக பொறியியல் பட்டப்படிப்பில் தோல்வி பெற்ற பிறகு விளையாட்டுத்துறையில் தனக்கு இருந்த திறமையை பயன்படுத்தி ஒரு தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க தொடங்கினார்.

   

அப்போதுதான் புதிதாக எதையாவது ஒன்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. சுற்றுச்சூழலுக்காக என்ன செய்யலாம் காலநிலை மாற்றத்தை கண்டுபிடிப்பதற்காக என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்ட ஆனந்த் அதற்கு உகந்த ராக்கெட்டுகளை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். தமிழ்நாட்டை தளமாக கொண்ட ஸ்பேஸ் ஒன் இந்தியா என்ற ஸ்டார்ட் ஆப்பை அவர் தொடங்கினார். அதில் சுற்றுப்புறத்தை கண்டறிய உதவும் விண்வெளியில் நடக்கும் மாற்றங்களை கண்டறியவும் ஒரு ராக்கெட்டை மொபைல் பேடுடன் இணைத்து ஏவ வேண்டும் என்று பணியாற்றினார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 2024 அன்று மொபைல் ஏவுதாத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திருவாதத்தை கடற்கரை கிராமத்தில் இருந்து ஏவினார். இது வெற்றிகரமாக சென்றது.

 

இந்த ஹைபிரிட் ராக்கெட் ஏவுவதன் மூலம் விண்வெளியில் வளிமண்டல நிலைமைகளை கண்காணிக்கவும் சேகரிக்கவும் முடியும். காலநிலை மாற்றம் அதை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு இது பெரிதாக உதவும் என்று ஆனந்த் மேகலிங்கம் கூறியிருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக இஸ்ரோ அரசாங்கம் விமானப்படை ஆகியவற்றின் உதவிகளை வைத்து அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்து சென்றார். RHUMI 3 என்ற கியூப் செயற்கைக்கோளை கண்டுபிடித்தார். இந்த செயற்கைக்கோளின் வெளியீட்டு விழாவை 5000 மாணவர்கள் ஏராளமான அரசு அதிகாரிகள் மாநில அமைப்பினர் பார்வையிட்டனர். இந்த RHUMI 3 க்யூப் செயற்கைக்கோளையும் 50 பிக்கோ செயற்கைக்கோளியும் சராசரி கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரத்தில் கொண்டு சென்றது. காஷ்மீர் கதிர்வீச்சின் தீவிரம் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் காற்றின் தரம் போன்ற வளிமண்டல அம்சங்களை பற்றிய தரவுகளை சேகரிக்கும் திறன்களுடன் இவர் கண்டுபிடித்த செயற்கைக்கோள் தருகிறது.

ஆனால் இதுவும் பத்தாது இன்னும் துல்லியமாக இதை ஏ வேண்டும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இது உதவும் வகையில் செய்ய வேண்டும் என்று தான் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஆனந்த் மேகாலிங்கம் கூறியிருக்கிறார்.