எட்டாவில் 9 நாட்கள் விரதம் இருந்த 12 வயது சிறுமி, சாமுண்டா தேவி கோயில் திருவிழாவில் சௌமேய் சாப்பிட்டபோது அது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஸ்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி, தனது குடும்பத்தினருடன் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தரிசனம் முடிந்த பிறகு, மாலை 3:30 மணியளவில் கோயில் அருகில் நடந்த திருவிழாவில் குடும்பத்துடன் சேர்ந்து ஐஸ்கிரீம் மற்றும் சௌமேய் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென சிறுமிக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
