“நாகையில் பதறவைக்கும் கொடூரம்..! மீன் விற்க வந்த இடத்தில்.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்… முதியவரின் காம வெறிக்கு பலியான பரிதாபம்…!”

By Swetha on ஆனி 12, 2026

Spread the love

நாகப்பட்டினம் அண்ணாசிலை அருகேயுள்ள மீன் மார்க்கெட் பகுதியில், 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார், உடலைக் கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வடக்கு நல்லியான் தோட்டத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பதும், அவர் அதே பகுதியில் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையாக உயிரிழந்தாரா என்பதை அறிய போலீசார் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ராமசாமி என்ற முதியவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். தனியார் காப்பகத்தில் தங்கி மீன் வியாபாரம் செய்து வந்த ராமசாமி, மீன் வாங்க வரும்போது சின்னப்பொண்ணுவிடம் அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனியாக இருந்ததை சாதகமாக்கிக் கொண்டு, அவரிடம் ராமசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அதற்கு மூதாட்டி ஒத்துழைக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ராமசாமி அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

   

இந்தக் கொடூரச் செயலை ஒப்புக்கொண்ட ராமசாமியை வெளிப்பாளையம் போலீசார் முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவர் நாகப்பட்டினம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராமசாமியை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நாகப்பட்டினம் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தனியாக மீன் வியாபாரம் செய்து வந்த முதியவள் படுகொலை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.