மதுரையில் சிறுவன் ஒருவனின் கண் குழியின் மேற்பகுதியில் விசித்திரமாக வளர்ந்த பல்லை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். இது மருத்துவ உலகினரிடையே பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக பற்கள் ஈறுகளில் அல்லது தாடையில்தான் வளரும், ஆனால் சிறுவனின் கண் பகுதியில் பல் வளர்ந்திருந்தது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, கண் பார்வைக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாதவாறு சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மருத்துவ வரலாற்றில் கண் குழியில் பல் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுவதால், இதுகுறித்த ஆய்வு அறிக்கை பிரபல மருத்துவ இதழான ‘ஆப்தால்மாலஜி’-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் துல்லியமான மற்றும் கடினமான சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சிறுவனின் பார்மையையும் முக அமைப்பையும் பாதுகாத்த மதுரை மருத்துவர்களுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
