“அட.. அது எப்படி முடியும்…? நொடி பொழுதில் அன்லாக்…” ஷாக் கொடுக்கும் திருடனின் மாஸ்டர் பிளான்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன கார் ஒன்றை, தலையில் கேப் அணிந்த நபர் ஒருவன் மிக சுலபமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் மெதுவாக வந்த அந்த நபர், சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று நாலாபுறமும் நோட்டம் விட்டுள்ளார். பின்னர், சில வினாடிகளிலேயே காரின் பூட்டைத் திறந்து காரை இயக்கி நொடிப் பொழுதில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட அந்த காரில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகளும் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஹாப்பூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து காரைத் தூக்கிச் சென்ற கேப் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.