ஒரு சின்ன சந்தேகம்… தூக்கத்தில் மாரடைப்பு… கதறி அழுத மனைவி… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

பெங்களூருவில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தொட்டதோகுரு பகுதியில் உபேந்திரா என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அனிதாவுக்கும் மதுசூதன் ரெட்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உபேந்திரா, இருவரையும் கண்டித்து எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் உபேந்திராவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த உபேந்திராவை மதுசூதன் கழுத்தை நெரித்தும், அனிதா மூச்சுவிட முடியாதபடி மூக்கு மற்றும் வாயைப் பொத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கணவர் குளியலறைக்குச் செல்லும்போது தவறி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாகக் குடும்பத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளனர்.

   

இதையடுத்து, உபேந்திராவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரமும் கொலைச் சதியும் அம்பலமானது. இதையடுத்து அனிதா மற்றும் மதுசூதன் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.