அய்யய்யோ… டயர் வெடிச்சுடுச்சு… நெடுஞ்சாலையில் அரங்கேறிய கோர விபத்து… தடுப்புச்சுவரை நொறுக்கி தலைகீறாக கவிழ்ந்த தார் கார்… நெஞ்சை நடுங்கவைக்கும் ஷாக்கிங் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 13, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நாத்வாரா – உதய்பூர் நெடுஞ்சாலையில், பதர்தா அருகே மஹிந்திரா தார் வாகனம் மீது அதிர்ச்சி தரும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அக்டோபர் 11 அன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தின் டயர் திடீரென வெடித்ததே விபத்திற்குக் காரணmகும்.

டயர் வெடித்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தார் வாகனம், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை இடித்து நொறுக்கியது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

   

https://twitter.com/IndiaToday/status/2109640095817203997/video/1

   

இதுபோன்ற நெடுஞ்சாலை விபத்துகள் வாகன ஓட்டிகள் மத்தியில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளன. நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன்பு வாகனங்களின் டயர்கள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை முறையாகச் சோதிக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது. ராஜஸ்தான் காவல்துறை இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.