பயங்கர ஷாக்..! ரயிலில் உணவு டெலிவரி செய்யும்போது தவறி விழுந்த ஸ்விக்கி ஊழியர்… பதைபதைக்க வைக்கும் காட்சி..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ஊழியர் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இருந்த பயணிக்கு உணவை வழங்க ரயிலுக்குள் சென்றுள்ளார். ஆனால், அவர் உணவை ஒப்படைத்துவிட்டுத் திரும்புவதற்குள், வெறும் 1-2 நிமிடங்கள் மட்டுமே அங்கு நின்றிருந்த அந்த ரயில் புறப்படத் தொடங்கியது.

ரயில் வேகம் எடுப்பதற்குள் அவசரமாகக் கீழே இறங்க முயன்றபோது, அவர் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர் உயிர் தப்பினார். எனினும், ஒரு சிறிய காலதாமதம் அல்லது கவனக்குறைவு அவரது உயிரையே பறித்திருக்கக்கூடும் என்பதால், இச்சம்பவம் ரயில் பயணிகளிடையேயும் டெலிவரி ஊழியர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.