அடியாத்தி…! இப்படி எவ்ளோ நேரம் ட்ராவல் பண்றது…? ரயிலில் அலைமோதிய கூட்டம்… கொந்தளிக்கும் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 17, 2026

Spread the love

பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வரும் வேளையில், சாதாரண மக்கள் பயணிக்கும் தற்போதைய ரயில்களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

அடிப்படை வசதிகள், ரயில் நிலையங்களின் தூய்மை, ரயில்கள் சரியான நேரத்திற்கு இயங்குதல் மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றை முதலில் உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் பிரதமருக்கும் ரயில்வே அமைச்சருக்கும் வலியுறுத்தியுள்ளனர். சாதாரண பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தானியங்கி டிக்கெட் பரிசோதனை வாயில்களை அமைப்பது மற்றும் கூடுதல் பெட்டிகளை இணைப்பது போன்ற தீர்வுகளை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.