நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி விட்டு பிரிந்து வந்த பிறகு சினிமாவில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல கராத்தே பாபு, ஜூனி போன்ற படங்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கும் இவர் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்த்தி ரவி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ” மனசு கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல். சண்டைகள் இல்லை, வார்த்தைகள் இல்லை, வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்லப் பிராணிகள் மட்டுமே எனக்கு போதும். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது. இது என் கல்லூரிக் காலத்தில் நான் கற்றுக்கொண்டது” என்று பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
