actress nayanthara

அடுத்த ரவுண்டுக்கு தயாரான நடிகை நயன்தாரா? இப்படி ஒரு மாற்றமா என ஷாக் ஆன தமிழ் சினிமா ரசிகர்கள்!

By Elango on மாசி 11, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு இயக்குனர் தயாரிப்பாளரை நடுங்க செய்பவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் காட்டும் கெடுபிடி, நடிக்கும் சீன்களில் அவர் போடும் கண்டிஷன்கள் அதனால் பல படங்களின் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட காலம் உண்டு.

ஆனால் இப்போது நடிகை நயன்தாராவிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை நடித்து முடித்துள்ள அவர் இப்போது ஹாய் மற்றும் மண்ணாங்கட்டி ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

   

அந்த படங்களின் ஷூட்டிங்கில் இதுவரை சரியாக நடிக்காமல் சாக்கு போக்கு சொல்லி வந்த நயன்தாரா, இப்போது அந்த 3 படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அழைத்து பேசியுள்ளார். அவர்களுக்கு அவர் நடிக்க வேண்டிய கால்ஷீட் தேதிகளை பிரித்து தந்து பெண்டிங் உள்ள ஷூட்டிங்குகளை முடித்து தர சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.