வீட்டுக்கு 30,000 ரூபாய் மானியம்..! தமிழகத்தில் உருவாகும் 37 மாதிரி சூரிய கிராமங்கள்.. மத்திய அரசின் அதிரடித் திட்டம்..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

மத்திய அரசு, வீடுகளில் சூரியசக்தி மின்சாரப் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் நோக்கில் ‘பி.எம். சூர்ய கர் முப்தி பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) என்ற புதிய திட்டத்தை 2024-ல் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், தங்கள் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் அமைக்க முன்வரும் பொதுமக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரூ. 30,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக, தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களிலும் ‘மாதிரி சூரிய கிராமங்கள்’ (Model Solar Villages) உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள அனைத்து வீடுகள் மற்றும் பொதுக் கட்டிடங்களுக்குச் சூரியசக்தி மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படும். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதோடு, கிராமப்புறங்களில் தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்ய இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.