“வெள்ளத்தில் அடித்து சென்ற வீடு…” துணிச்சலாக குதித்த பெண்… உயிரை பணயம் வைத்து மீட்ட அறிமுகமில்லாத நபர்…. புயலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் ‘ஹெலன்’ புயல் காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில், 66 வயதான லெஸ்லி வொர்த் என்பவரின் வீடு அடித்தளத்தோடு பெயர்ந்து சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வீட்டின் இரண்டாம் மாடியில் சிக்கியிருந்த அவர், வீடு நொறுங்கத் தொடங்கியதும் வேறு வழியின்றி ஆபத்தான ஆற்று வெள்ளத்தில் குதித்துள்ளார்.

அப்போது தனது மகனின் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு வந்திருந்த எடி ஹன்னல்என்பவர், மூதாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் உடனடியாக ஆற்றில் குதித்தார். சுமார் 600 அடி தூரம் ஆபத்தான மரக் கழிவுகளுக்கு இடையே நீந்திச் சென்று, மூதாட்டியைக் கெட்டியாகப் பிடித்துப் பத்திரமாகக் கரை சேர்த்தார். வீட்டை இழந்தபோதிலும், அறிமுகமில்லாத ஒரு நபரின் அசத்துவமான தைரியத்தால் உயிர் தப்பிய மூதாட்டி மற்றும் எடி ஹன்னலின் இந்த வீரம் நிறைந்த மீட்புச் சம்பவம் உலகளவில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.