என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை மற்றும் ஆன்மீகத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள். இவர்களின் மரபுப்படி ஒருவரின் மரணம் என்பது வாழ்வின் முடிவு அல்ல, மாறாக ஆன்மா மற்றொரு பயணத்தைத் தொடங்குவதாகும். இதனால் இறந்த உடலை உடனடியாக தகனம் செய்யாமல், காட்டில் இலைகள் மற்றும் கிளைகளால் மூடி சில காலம் பராமரித்த பிறகே தகனம் செய்கின்றனர்.

தகனம் செய்யப்பட்ட உடலின் சாம்பலை கவனமாகச் சேகரித்து, வாழைப்பழத்தில் தயாரிக்கப்படும் சூப்புடன் கலந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பருகுகின்றனர். மானுடவியல் சொற்களில் அகநரமாமிச உண்ணல் என்று அழைக்கப்படும் இந்த சடங்கினை, இவர்கள் உணவுக்காக அல்லாமல் இறந்தவர்களுடன் தங்கள் தொடர்பினைத் தொடர்வதற்காகவும், அன்பின் வெளிப்பாடாகவும் கடைபிடிக்கின்றனர்.

   

வெளி உலகிற்கு இது கொடூரமாகத் தோன்றினாலும், இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தினருடன் என்றென்றும் கலந்திருக்கவும் இதுவே முறையான பிரியாவிடை என்று இவர்கள் நம்புகின்றனர். ஒரு கலாச்சாரத்திற்கு விசித்திரமாகத் தோன்றும் பழக்கம், மற்றொரு கலாச்சாரத்திற்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதை இந்த யனோமாமி பழங்குடி மக்களின் சடங்கு நமக்கு உணர்த்துகிறது.