தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் montha புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலையை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
