தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று மும்பை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பட்டாசுகளிலிருந்து வரும் தீப்பொறிகள் மற்றும் வெடிமருத்து துகள்கள் கண்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்களில் காயம் ஏற்பட்டால் அவற்றை கைகளால் தேய்க்கக்கூடாது என்றும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவிதமான வீட்டு வைத்தியங்களையும் செய்யக்கூடாது என்றும் டாக்டர் வந்தனா ஜெயின் எச்சரித்துள்ளார். மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிப்பதோடு, குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டவுடன் பாதிக்கப்பட்ட பகுதியை குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு சுத்தமான குளிர்ந்த நீரின் கீழ் காட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாறாக, தீக்காயங்களின் மீது பனி, எண்ணெய், பற்பசை அல்லது மஞ்சள் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
