ரோத்தக் நகரில் ஜாட் பவன் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோர விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற தாய் மற்றும் மகள் மீது பின்னோக்கி வந்த அதிவேகக் கார் ஒன்று திடீரென மோதியது.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த தாயும் மகளும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அதிவேகமாக வந்த வாகனம் மோதும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
