நெல்லையை சேர்ந்தவர் துரைராஜ் (33), தொழிலாளி. துரைராஜிக்கும், தனலட்சுமிக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, தனலட்சுமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, 7 மாதங்களுக்கும் மேலாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக, பஸ் ஸ்டாப்புக்கு வந்த தனலட்சுமியிடம் பேசினார் துரைராஜ். பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனலட்சுமி தனது தாய்க்கு (பேச்சியம்மாள்) தொடர்பு கொண்டார். உடனே பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்து, மகளுக்கும் – மருமகனுக்கும் இடையே உள்ள மோதலை தடுக்க முயன்றார், பேச்சியம்மாள். மாமியாரை கண்டதும் மேலும் ஆத்திரம் அடைந்த துரைராஜ், தனது மாமியாரின் கைவிரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பேச்சியம்மாவை, பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…