ஐயோ கடவுளே… நொடியில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்… மாயம் போல் அசராமல் நின்ற ஒற்றை வீடு… நேபாள வெள்ளப் பேரழிவில் தப்பியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

By Swetha on ஆவணி 31, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் மற்ற அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு சிறிய பச்சை நிற வீடு மட்டும் எந்தவித சேதமுமின்றி தப்பியது வெறும் அதிர்ஷ்டத்தால் அல்ல என்று கட்டுமான நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெறும் கற்களைக் கொண்டு மட்டுமே கட்டப்பட்டவை என்பதால், பக்கவாட்டில் வரும் நீரின் வேகத்தை தாங்க முடியாமல் எளிதில் சரிந்துவிடுகின்றன. ஆனால், இந்த பச்சை நிற வீடு வலுவான கான்கிரீட் கட்டமைப்பில் தூண்கள், பீம்கள் மற்றும் அடித்தளம் ஆகியவை இரும்பு கம்பிகளால் முறையாக இணைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது இதன் முதல் பலமாகும்.

இந்தக் கட்டிடம் வெள்ளத்தின் பிரதான பாதையில் நேரடியாக அமையாமல், சற்று விலகியும் உயரமான பகுதியிலும் அமைந்திருந்தது அதன் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தியது. இதனால் வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகளும் தண்ணீரும் வீட்டின் மீது நேரடியாக மோதாமல் இருபுறமும் பிரிந்து சென்றன. மேலும், வீட்டின் சிறிய அளவும் நீரின் ஓட்டத்தை எளிதில் திசைதிருப்ப உதவியாக இருந்ததுடன், வீட்டைச் சுற்றி படிந்த சேறுகூட அடுத்தடுத்த வெள்ள அலைகளின் தாக்கத்தைத் தடுக்கும் இயற்கையான அரணாகச் செயல்பட்டுள்ளது.

   

இந்த இயற்கைப் பேரிடரில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள போதிலும், முறையான கட்டுமான முறையாலும் அமைவிடத் சிறப்பாலும் மட்டுமே இந்த ஒரு குடும்பம் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தச் சம்பவம், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையிலான அறிவியல் பூர்வமான கட்டுமானங்களின் அவசியத்தை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.