“வயிற்றுப் பிழைப்புக்கு வந்துட்டு பெங்களூரை திட்டாதீங்க…” கொந்தளித்த உள்ளூர் மக்கள்.. அதிரடி பதிலடி கொடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்…!!

By Devi Ramu on மார்கழி 31, 2025

Spread the love

பெங்களூரு நகரம் குறித்து பெண் பொறியாளர் ஒருவர் பகிர்ந்த சமூக வலைதளப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் தான் எடுத்த மிகச்சிறந்த முடிவு பெங்களூரை விட்டு வெளியேறியது தான் என ஸ்ரேயா என்ற மென்பொருள் பொறியாளர் பதிவிட்டுள்ளார்.

அங்குள்ள மோசமான சாலைகள், கடும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான வாழ்க்கைச் செலவு போன்றவை தன்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசிப்பதாகவும், அங்கு வாழ்க்கை மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்த கருத்திற்கு கன்னட அமைப்பினரும் பெங்களூருவாசிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிழைப்புக்காக வந்துவிட்டுச் செல்லும் போது நகரத்தை குறை கூறுவது நியாயமில்லை என அவர்கள் சாடி வருகின்றனர்.

   

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அந்தப் பெண், பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினால் தீர்வு காண்பதை விடுத்து, தனிநபர் மீது வெறுப்பைக் கக்குவது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நகரத்திற்கும் ப்ளஸ், மைனஸ் உண்டு என்றும், ஒரு கருத்துக்காகத் தன் மீது தாக்குதல் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.