சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோவில், மின்சாரம் பாயும் வேலி ஒன்றின் மீது ஏற முயன்ற பாம்பு ஒன்று பலமுறை மின்சார அதிர்ச்சிக்கு (Electric Shock) உள்ளாகும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரு காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் ஏறும் போது, அந்தப் பாம்பிற்கு பலமுறை மின்சாரம் தாக்கி உடல் அதிர்கிறது. இருப்பினும், தனக்கு ஏன் அப்படி நேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பாம்பு, விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் அதே வேலியின் மீது ஏறி மின்சார அதிர்ச்சியை வாங்கிக் கொள்வது காண்போரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
Snake VS Electric Shock 🫨 ⚡
Snakes don't really have sense 😭🤣 it even went there again after the first shock 😂 pic.twitter.com/gR6APSiZua
— ً (@dn_xsoul) February 17, 2026
இந்த வீடியோ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. அந்த வேலியில் குறைந்த அளவிலான மின்சாரம் (Low Voltage) பாய்ந்ததால் பாம்பு உயிர் தப்பியது என்றும், இல்லையெனில் அது அவ்விடத்திலேயே உயிரிழந்திருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்யும் அந்தப் பாம்பின் அறியாமையைக் கண்டு இணையவாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
