“அதிர்ஷ்டம்னா அது இவங்களுக்கு தான்… கஜகேசரி ராஜயோகத்தால் கொட்டப்போகும் பணமழை… இந்த 5 ராசிக்கு யோகம்…! உங்க ராசி இருக்கா…?”

By Swetha on ஆடி 11, 2026

Spread the love

ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை கடக ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் மேஷம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனம் ஆகிய 5 ராசிகளுக்கு பொன்னான காலமாக அமையப் போகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவும், பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரமும் கிடைக்கும். கடக ராசியில் இந்த யோகம் நிகழ்வதால், இந்த ராசியினர் வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்; மாணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சாதகமான சூழ்நிலை நிலவும். சிம்ம ராசிக்காரர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிப்பதுடன், அரசு பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், வெளிநாடு செல்லும் கனவுகளும் நனவாகும்.

   

தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களும் திருமண முயற்சிகளும் கைகூடும்; வெளியூர் பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். மீன ராசியினருக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும் காலம் இதுவாகும்; புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவதோடு, சுபச் செய்திகளும் தேடி வரும்.