சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில், தரைமட்டத்திலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் செங்குத்தான மலைப்பாறையில் தொங்கும் மரக்கூண்டு போன்ற ஒரு விசித்திரமான மளிகைக் கடை அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இக்கடை, உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் அசௌகரியமான கடை என்று அழைக்கப்படுகிறது. மலையேறும் வீரர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தின்பண்டங்களை வழங்குவதற்காக வெறும் 2 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சிறிய மர கேபின் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது அத்தனை எளிதான காரியம் அல்ல; அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். மலையேறுபவர்கள் கயிறுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மெட்டல் கேபிள்களின் உதவியோடு செங்குத்தான பாறையில் ஒன்றரை மணி நேரம் கடினமாகப் பயணித்தே இந்த கடையை அடைய முடியும். மேலும், இந்த சிறிய கடையில் கழிப்பறை வசதி இல்லாததால், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இயற்கை உபாதைகளைத் தவிர்க்கும் பொருட்டு, வேலை நேரத்தில் தண்ணீர் குடிப்பதைத் கூட முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.
https://www.instagram.com/p/DZ2VCdsDPYv/?utm_source=ig_web_button_share_sheet
இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தினமும் அதிகாலையிலேயே கனமான உணவுப் பொருட்களைத் தங்கள் முதுகில் சுமந்து கொண்டு இந்த செங்குத்தான பாறை மீது ஏறி கடையைத் திறக்கின்றனர். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் சாதாரணமாகவே உள்ளது. கடையில் ஊழியர்கள் இல்லாத சமயங்களில், மலையேறுபவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் நேர்மையாகப் பணம் செலுத்திச் செல்லும் ‘நம்பிக்கை’ அடிப்படையிலான சிஸ்டமும் இங்கு செயல்பாட்டில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் - கல்பனாவுக்கு, பெஸ்டி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப்…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…
மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…