“டேக் பண்ணி விடுங்க… கமெண்ட் பண்றேன்… உயிரைப் பணயம் வைத்து… இளம்பெண்கள் செய்த கொடூர சாகசம்… வீடியோவால் உறைந்துபோன நெட்டிசென்கள்…!”

By Swetha on ஆவணி 15, 2026

Spread the love

இன்றைய இளைஞர்கள் பலருக்குச் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் புரிவதில்லை. சாலையில் அசாத்திய சாகசங்களில் ஈடுபடுவதும், மற்றவர்களின் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதும் தைரியம் அல்ல; மாறாக அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. தங்களை நல்வழிப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்துப் பேசுவதும், சமூக வலைத்தளப் புகழுக்காகத் தன் உயிரையே பணையம் வைப்பதும் மிகவும் ஆபத்தான மனநிலையாகும்.

“சுதந்திரம் அடிப்படை உரிமை, ஆனால் அது பொறுப்புணர்வுடன் கூடியதாக இருக்க வேண்டும்.” சாலையில் செய்யும் ஒரு சிறு அலட்சியம், சாகசம் செய்பவரின் உயிரை மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையையும் நொடிப்பொழுதில் சீரழித்துவிடும். ஆபத்தை உணராமல் தற்காலிகப் பொழுதுபோக்கிற்காக உயிரோடு விளையாடுவது எந்தவிதத்திலும் நியாயமற்றது.

   

பிள்ளைகளுக்குச் சுதந்திரம் அளிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்குப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுப்பதும் ஆகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, எது சரி எது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும். எல்லை தாண்டிய சுதந்திரம் ஆபத்தில் முடியும் என்பதைப் புரியவைத்து, பொறுப்புள்ள குடிமக்களாக அவர்களை வளர்ப்பதே பெற்றோர் செய்யும் சிறந்த வழிகாட்டுதலாகும்.