நிஜமாகவே நாம் ஒரு வினோதமான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெங்களூருவில் பண்டிகைக் காலங்களில் பேருந்து மற்றும் இரயில் பயணச்சீட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், அதை நையாண்டி செய்வதாக நினைத்துக்கொண்டு ஒரு குடும்பம் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஒரு தந்தை என்றும் பாராமல் அவரைப் பெரிய கோணிப்பையில் அடைத்து, கூரியர் அலுவலகத்திற்குத் தூக்கிச் சென்ற அவரது மகளும் குடும்பத்தினரும், அவரை வெளியூருக்கு பார்சல் செய்ய வேண்டும் என்று கூறி அங்கிருந்த ஊழியர்களையே மிரள வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்து அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற மோகத்தில், ஒரு மனிதரின் கண்ணியத்தையே மறந்து இப்படிச் செயல்பட்டது விவேகமற்ற செயலின் உச்சமாகும்.
“>
இந்த விபரீத விளையாட்டைப் பார்த்த கூரியர் அலுவலக ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டதால், அந்த தந்தை பையிலிருந்து மீட்கப்பட்டார். நகைச்சுவை என்ற பெயரில் முதியவர் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த குடும்பத்தினர், இறுதியில் காவல் நிலையத்தில் தஞ்சம் புக வேண்டியதாயிற்று.
இந்நிலையில் தொழில்நுட்பமும் புகழும் மனிதர்களை எந்த அளவிற்கு மதியிழக்கச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாகும். ஒரு சிறிய காணொளிக்காகக் குடும்ப உறவுகளையும் சட்டத்தையும் கேலிப்பொருளாக்கிய அந்த நபர்களுக்குப் காவல்துறையினர் தக்க அறிவுரை வழங்கி எச்சரித்துள்ளனர்.
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…