“கடவுளே… யார் பண்ண வேலை இது…? சாமி கும்பிட வந்த இடத்தில் 72 வயது மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வைரலாகும் CCTV காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர தாலுகா மனூர் கிராமத்தைச் சேர்ந்த பேபி ஷெட்டி (72) என்ற முதிய பெண்மணி, கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி மதியம் புகழ்பெற்ற கோட்டா ஸ்ரீ அம்ருதேஷ்வரி கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.

நண்பகல் 12:15 மணி அளவில் கோயிலுக்குள் சென்று வழிபாட்டை முடித்துவிட்டு 12:30 மணிக்கு வெளியே வந்தபோது, அவரது கழுத்திலிருந்த 24 கிராம் எடையுள்ள சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத் தாலிச் சங்கிலி மாயமாகி இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பக்தர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மர்மக் கும்பல் ஒன்று அவரது கழுத்திலிருந்து சங்கிலியை நைஸாக அறுத்துத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

   

இச்சம்பவம் குறித்துப் பேபி ஷெட்டி அளித்த புகாரின் பேரில், கோட்டா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார், இத்திருட்டுச் சம்பவத்தில் 3 பெண்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆன்மீக ஸ்தலத்தில் முதிய பெண்ணிடம் நடந்த இந்த துணிச்சலான திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.