அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவம் அந்நாட்டையே அதிரவைத்துள்ளது. சுமார் 4,35,000 பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, அமெரிக்காவின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகும்.
மேலும் அதிகாலை 7 மணி அளவில் நிகழ்ந்த இந்த வெடிப்பு காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திடீர் விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, அவசரக்கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு, இந்த சுத்திகரிப்பு நிலைய வெடிப்பு பெரும் பொருளாதார சவாலாகவும், பாதுகாப்புக் குறித்த கவலையாகவும் மாறியுள்ளது.
