எப்படித்தான் யோசிக்கிறாங்களோ…? மதுக்கடையில் பெண்களுக்கென பிரத்யேக கவுண்டர்…! ‘ஹலோ கிட்டி’ தீமில் அசத்தல் ஏற்பாடு… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

டெல்லி விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை ஒன்றில், பெண் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகக் கவுண்டர் மற்றும் அதன் புதுமையான அலங்காரம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக மதுக்கடைகளில் ஆண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில், பெண்கள் சிரமமின்றிப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாங்கிச் செல்லும் வகையில் இந்தத் தனி கவுண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/Dey8MS3Myhm/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==

   

குறிப்பாக, அந்தக் கவுண்டரை சுற்றிலும் பிங்க் நிறத்திலான ‘ஹலோ கிட்டி’ ஸ்டிக்கர்கள் மற்றும் மென்மையான டெட்டி பியர் பொம்மைகளால் அழகுபடுத்தியிருப்பது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வசதியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.