தமிழகமே அதிர்ச்சி… 63 வயது முதியவரை நிர்வாணமாக்கி… 2 பெண்கள் கணவரோடு சேர்ந்து செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மரக்கடை உரிமையாளர் கோவிந்தசாமி என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (47), எஸ்தர் நான்சி (30) மற்றும் அவரது கணவர் முன்னா கருப்புசாமி (33) ஆகிய மூவர் கும்பல் திட்டமிட்டு கடத்தியுள்ளது. கோவிந்தசாமியை புழல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்ததோடு, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி ஆபாச வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி, அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு இந்த கும்பல் கொடூரமான முறையில் மிரட்டல் விடுத்துள்ளது.

இவர்களிடமிருந்து தந்திரமாகப் பணத்தை எடுத்து வருவதாகக் கூறி தப்பிய கோவிந்தசாமி, உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், மிரட்டலில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட பத்மா, எஸ்தர் நான்சி மற்றும் முன்னா கருப்புசாமி ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். முதியவரைக் கடத்தி, ஆபாச வீடியோ எடுத்துப் பணம் பறிக்க முயன்ற இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.