அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள டார்டன் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 27 வயதான அன்னா மார்கரெட் பேக்கன், தனது பள்ளியில் படித்த பதின்மவயது மாணவர் ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், அம்மாணவன் 18 வயதை எட்டி பட்டம் பெற்ற பிறகே (ஜூலை 2023) அவனுடன் உறவு வைத்திருந்ததாக ஆசிரியர் மார்கரெட் கூறியிருந்தார். இருப்பினும், அவர்கள் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தபோது, அம்மாணவன் சிறுவனாக இருந்தபோதே அவருடன் பாலியல் உறவைத் தொடங்கியதாக மார்கரெட் உண்மையை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், மார்கரெட் அந்த ஹோட்டலில் மே 8, ஜூன் 4, ஜூன் 11 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் குறைந்தது நான்கு முறையாவது அறைகளை முன்பதிவு செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த ஹோட்டலில் நடந்த விருந்தின் போது மற்ற மாணவர்களுக்கும் அவர் மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். அம்மாணவன் ஆசிரியையின் குடியிருப்பில் தங்கியிருந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் அம்மாணவன் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருவரின் அந்தரங்கப் புகைப்படங்களும் செல்போனில் இருந்தது மற்றும் இருவரின் ரகசிய நடத்தைகள் குறித்த தகவல்களும் காவல்துறை விசாரணையில் உறுதியாகின.
ஆகஸ்ட் 2022-இல் பள்ளி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த மார்கரெட், இச்சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 2024-இல் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய அதே நாளில் தனது வேலையை ராஜினாமா செய்தார். சிறுவனுடன் தவறான உறவு வைத்திருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தற்போது மார்கரெட்டுக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…