கரூர் சீட் யாருக்கு?….. காய் நகர்த்தும் தவெக தலைமை….. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 1, 2026

Spread the love

கரூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தேர்வு குறித்து அக்கட்சியின் தலைமையகத்தில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரூர் துயர சம்பவ வழக்கில் சிறை சென்ற மதியழகனை விடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சீட் வழங்கினால் கரூரில் வெற்றி பெறுவது கடினம் என உளவுத்துறை அறிக்கை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விரிவான கோப்பு ஒன்று கட்சியின் தலைவர் விஜய்யின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தொகுதி நிலவரம் மற்றும் மக்கள் செல்வாக்கு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் தவெக தலைமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த உளவுத்துறை அறிக்கையின் பின்னணியில், தொகுதி மக்களின் மனநிலை மற்றும் கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கரூர் தொகுதியை மதியழகனுக்கே மீண்டும் ஒதுக்கீட செய்யலாமா என்றும், எம்.ஆர். விஜயபாஸ்கருக்குக் கட்சியின் முக்கிய பொறுப்பு அல்லது வாரியத் தலைவர் பதவி வழங்கி கவுரவிக்கலாமா என்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கரூரில் தவெக சார்பில் போட்டியிடப்போகும் அந்த முக்கிய வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் கரூரில் மீண்டும் களமிறங்கி மக்கள் மனதை வெல்லப்போவது யார் என்பதும், தவெக தலைமை எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன என்பதும் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.