ஈரானின் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இந்த பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த ஆதிக்கப் போட்டியின் ஒரு பகுதியாக, கடலில் எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிவதும், வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதுமாக ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. வல்லரசு நாடுகளே இந்த விவகாரத்தில் அச்சத்துடன் செயல்பட்டு வரும் வேளையில், அதே கடல் பகுதியில் ஒரு சிறுமியின் செயல் உலகையே வியக்க வைத்துள்ளது.
जीवन की ज़िद !
एक ईरानी लड़की होर्मुज स्ट्रेट के पास बंदर अब्बास शहर के बीच पर झूलों पर खेल रही है, जबकि पास के एक नेवल बेस से धुएं का गुबार हवा में उठ रहा है, जिसे हमलों का निशाना बनाया गया था।
लोकेशन: 27.181687, 56.308647@GeoConfirmed pic.twitter.com/KdfZZYomnd
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) March 27, 2026
“>
மேலும் எரியும் கப்பல்களும், போர்க்கப்பல்களின் இரைச்சலும் நிறைந்த அந்த ஆபத்தான கடற்கரையில், ஈரானைச் சேர்ந்த ஒரு சிறுமி எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடற்கரையில் ஊஞ்சலாடி விளையாடுகிறாள். சுற்றிலும் பேரழிவுக்கான அறிகுறிகள் தெரிந்தாலும், அவள் தனது மழலை மாறாத தைரியத்துடன் வானத்தை நோக்கி ஊஞ்சலாடுவது அமைதியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒருபுறம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் அரசியல் மோதல்கள் நடந்தாலும், மற்றொரு புறம் அந்த அச்சமற்ற சிறுமியின் ஊஞ்சலாட்டம், போர்ச் சூழலுக்கு மத்தியிலும் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மன உறுதியையும் பறைசாற்றுகிறது.
