டெல்லி சவுத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன் யாதவின் வீட்டிற்குள், நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லி காவல்துறை அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரப் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த திடீர் சோதனையின் போது அவரது குடும்பத்தினர் முறையற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், வீட்டில் இருந்த இரு சிறு குழந்தைகள் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் ஒரு நெருக்கடி நிலை போன்ற சூழலை உருவாக்குவதாக விமர்சித்துள்ள அவர், அரசு தன் நிதானத்தை இழந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தின் மூலம் எழும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து உறுதியுடன் களத்தில் நிற்போம் என்றும், எக்காரணம் கொண்டும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…
பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…
1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…