“டிகிரி முடித்த கையோடு மாதம் ₹85,000 சம்பளமா?”… ஐடி வேலைக்கு நிகரான சம்பளம்.. அதுவும் அரசு வங்கியில்… விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே பாக்கி..!!!

By Rajeshwari on சித்திரை 7, 2026

Spread the love

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள ‘லோக்கல் பேங்க் ஆபீசர்’ பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 145 காலிப்பணியிடங்களில், தமிழகத்திற்கு மட்டுமே 65 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், வங்கித் துறையில் குறைந்தது 18 மாதங்கள் அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையில், அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் மாதம் 48,480 ரூபாய் முதல் அதிகபட்சமாக 85,920 ரூபாய் வரை சிறப்பான ஊதியம் வழங்கப்பட உள்ளது.

   

இது தவிர, பஞ்சப்படி வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச் சலுகைகள் எனப் பல்வேறு கூடுதல் பலன்களும் உண்டு. தமிழ் மொழியில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பது இப்பணிக்கு அவசியமானத் தகுதியாகும். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 20, 2026-க்குள் ஐபிபிஎஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சொந்த ஊரிலேயே வங்கிப் பணியில் அமர விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.