திக்.. திக்..! அதிர்ச்சி சம்பவம்… பயணி கேட்ட ஒரே வார்த்தை… நொடியில் பறிபோன உயிர்… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த ஒருவர் இறங்குவதற்காக ஓட்டுநரிடம் கோரிக்கை விடுக்கவே, சாலை சந்திப்புக்கு அருகிலேயே பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில், ஆக்ராவில் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு நபர்கள், சாலையில் எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் ஒரு இளைஞர் தலையிலேயே படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொருவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.